நர்சிங் கல்லுாரியில் லேம்ப் லைட் விழா
தேனி: ஆண்டிபட்டி தாலுகா ராஜதானியில் உள்ள அன்னை டோரா நர்சிங் கல்லுாரியில் 2025 --- 2026 கல்வி ஆண்டின் புதிய பி.எஸ்சி., நர்சிங் மாணவிகளை வரவேற்பு, உறுதிமொழி ஏற்கும் லேம்ப் லைட் திருவிழா நடந்தது. தேனி மாவட்ட ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் குத்துவிளக்கு ஏற்றினார். கல்லுாரிச் செயலாளர் பேராசிரியர் லட்சுமணன் வரவேற்புரை வழங்கினார். முதல்வர் சுதாமகேஸ்வரி உறுதிமொழி ஏற்பு நிகழ்வை நடத்தினார். கல்லுாரியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி உறுப்பினர்கள் மருதை, அர்ஜூனன், ராதாகிருஷ்ணன், வஜ்ரவேல், சம்பத், மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.