இடப்பிரச்னை: 7 பேர் மீது வழக்கு
தேனி அல்லிநகரம் கிராம கமிட்டி பொருளாளர் முருகன். கிராம கமிட்டிக்கு சொந்தமான இடத்தை சர்வேயர் மூலம் அளந்தார். அங்கு வந்த அல்லிநகரத்தை சேர்ந்த வெங்கடேசன், ஜெகதீஸ்வரி, மாரிமுத்து, சுப்பிரமணியபிள்ளை, வீரமணி, ரிக்கேஷ், விக்னேஷ் ஆகியோர் ஆயுதங்களை காட்டி கொலைமிரட்டல் விடுத்தனர். முருகன் புகாரில் 7 பேர் மீது வழக்கு பதிந்து அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.