உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடப்போம் நலம் பெறுவோம் 100வது நாள் நடை பயிற்சி

நடப்போம் நலம் பெறுவோம் 100வது நாள் நடை பயிற்சி

தேனி : தேனியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்ட 100 வது நாள் நடைபயிற்சி கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.இத்திட்டம் கடந்தாண்டு நவ.,4ல் தமிழகம் முழுவதும் துவக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் 100 வது நாள் நடைபயிற்சி நேற்று நடந்தது. அரண்மனைப்புதுார் ஊராட்சி அலுவலகம் அருகே துவங்கி கொடுவிலார்பட்டி, கோட்டைபட்டி பிரிவு வழியாக மீண்டும் அரண்மனைப்புதுாரில் நிறைவடைந்தது. எம்.பி., தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணக்குமார், ஏ.டி.எஸ்.பி., வினோஜி, திட்ட இயக்குனர் அபிதாஹனீப், மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தாசில்தார் சதீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை