மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
06-Feb-2026
தேனி: தேனி நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் டி.என்.சி.எஸ்.சி., சுமைதுாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்க அங்கீகார தேர்தலை நடத்தவும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் மணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜ், நல்லமாயன், குமார், வேல்முருகன், சுப்பிரமணி, கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். லோடுமேன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து ரேஷன்கடைகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லும் நகர்வு பணிகள் பாதிக்கப்பட்டது. இன்றும் லோடுமேன்கள் குடோன்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடஉள்ளனர்.
06-Feb-2026