வடுகபட்டியில் அறிவுசார் நுாலகத்திற்கு இடம் தேர்வு
பெரியகுளம்,:வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் நூலகம் கட்ட இடம் தேர்வாகியுள்ளது.வடுகபட்டி பேரூராட்சியில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்ட அறிவுசார் நூலகம் கட்ட தமிழக அரசு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் ரூ.1.60 கோடி அனுமதி வழங்கியது. இதற்காக முதலில் வடுகபட்டி கலையரங்கம் பின்புறம் ரோட்டின் அருகே அரசு இடம் தேர்வு பரிசீலனை செய்யப்பட்டது. இட நெருக்கடி காரணமாக அந்த இடம் கைவிடப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் பின்புறம் கட்டப்பட உள்ளது. இதில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனவியல் பணி உள்ளிட்ட தேர்வுகளுக்கும், மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் நடக்க உள்ளது.-