உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 12 ஆண்டுகள் தலைமறைவாக  இருந்த லாரி டிரைவர் கைது

12 ஆண்டுகள் தலைமறைவாக  இருந்த லாரி டிரைவர் கைது

தேனி: தேனி நேருசிலை அருகே விபத்தில் தம்பதி இறந்த வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிரைவர் சதீஷை 25, போலீசார் பிடிவாரண்ட் உத்தரவில் கைது செய்தனர். தேனி கோடாங்கிபட்டி திருந்செந்துார் தெற்கு காலனி அழகுராஜா 46. இவரது மனைவி செல்வலட்சுமி 41. இத்தம்பதி டூவீலரில் கோடாங்கிபட்டியில் இருந்து 2013 அக்.2ல் தேனி நோக்கி வந்தனர். நேருசிலை அருகே திரும்ப முற்படும் போது கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற லாரி பின்புறமாக மோதி சம்பவ இடத்திலேயே தம்பதி பலியாகினர். தேனி போலீசார் லாரி ஓட்டிவந்த இடுக்கி மாவட்டம், சாக்குவள்ளம் அனக்காரா பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் மீது விபத்து வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சதீஷ் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இவருக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. தேனி எஸ்.ஐ., இளங்குமரன், சிறப்பு எஸ்.ஐ., வடிவேல், ஏட்டு பிரபு ஆகியோர் தலைமறைவாக இருந்த சதீஷை இடுக்கி மாவட்டம் சென்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை