உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் லாரி திருடியவர் கைது

தேனியில் லாரி திருடியவர் கைது

தேனி: தேனி நேதாஜி ரோட்டில் 2015ல் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான லாரி நின்றிருந்தது. இந்த லாரி திடீரென மாயமானது. சீனிவாசன் புகாரில் தேனி போலீசார் தேடி வந்தனர். திருடுவதற்கு உதவிய இருவரை கைது செய்தனர். ஆனால், லாரியை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் திருட்டில் மூளையாக செயல்பட்டது சிவகங்கை மாவட்டம் வாகைகுடி ராமசந்திரன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்ய தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் திருச்சியில் பதுங்கியிருந்த ராமசந்திரனை கைது செய்து தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !