மேலும் செய்திகள்
மக்காச்சோளம் விதைப்பு பணி துவக்கம்
13-Sep-2025
தேனி: மக்காச்சோளம், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் செப்.,30க்குள் பயிர்காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது: இயற்கை சீற்றம், வேறு பாதிப்புகளால் சாகுபடி பாதிக்கப்பட்டால் பயிர் காப்பீடு செய்திருந்தால் நிவாரணம் கிடைக்கும். மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்., 30 கடைசி நாள் ஆகும். ஏக்கருக்கு மக்காச்சோளம் ரூ. 632.32, சோளம் ரூ. 290.13, பருத்தி ரூ.1199.84 பிரிமீயம் தொகையாக செலுத்த வேண்டும். காப்பீடு செய்வதற்கு பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தேவை. காப்பீடு செய்வது தொடர்பான விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
13-Sep-2025