உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாழி மலையில் மகரஜோதி வழிபாடு

நாழி மலையில் மகரஜோதி வழிபாடு

ஆண்டிபட்டி; சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் சார்பில் டி.சுப்புலாபுரம் நாழி மலையில் மகர ஜோதி தீபம் ஏற்றினர்.சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மகரஜோதி ஏற்றும் நேரத்தை கணக்கிட்டு நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில் சார்பில் டி.சுப்புலாபுரம் கோயிலின் நேர் எதிரில் 5 கி.மீ., துாரத்தில் உள்ள நாழி மலையில் நேற்று மாலை 6:35 மணிக்கு மகர தீபம் ஏற்றப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் 'சுவாமியே சரணம் ஐயப்பா' கோஷத்துடன் மகர தீபத்தை தரிசித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துவன்னியன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ