உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தொழிலாளியை தாக்கியவர் கைது

 தொழிலாளியை தாக்கியவர் கைது

தேனி: அல்லிநகரம் வள்ளிநகர் கருப்பசாமி 25. சென்டை மேளம் இசைக்கும் தொழிலாளி. வேலை இல்லாதபோது தனது மூத்த சகோதரன் ரவிச்சந்திரனுடன் குச்சனுார் வைகை நகர் பின்புறம் உள்ள காளவாசல் அருகே உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதியில் மீன் பிடிப்பது வழக்கம். நவ.10ல் அங்கு சென்ற ஐவர், கருப்பசாமியிடம், 'எங்கள் வாத்தை எப்படி கொன்றாய்,' எனக்கூறி இருவரையும் தாக்கினர். இதில் கருப்பசாமிக்கு காயம் ஏற்பட்டது.பின் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். கருப்பசாமி புகாரில் தேனி போலீசார் அல்லிநகரம் பெரியசாமி, 2 சிறுவர்கள் என மூவர் மீது வழக்குப்பதிந்து பெரியசாமியை கைது செய்தனர். பெரியசாமி புகாரில் கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ