உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாமுல் கேட்டு கத்தி குத்து நடத்தியவர் கைது

 மாமுல் கேட்டு கத்தி குத்து நடத்தியவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் 32. பெரியகுளம் நகராட்சி தற்காலிக பணியாளர். தண்டுப்பாளையம் பகுதியில் நகராட்சி சார்பில் ரோடு போடும் பணி நடந்தது. அப்போது சூப்பர்வைசர் கணேசிடம், பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காமராஜ் 27. தகராறு செய்துள்ளார். தினேஷ், இவரது நண்பர் கிருஷ்ணக்குமாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர்களிடம் காமராஜ், 'நான் ரவுடி எனக்கு மாமுல் கொடுக்காமல் ரோடு போட விடமாட்டேன்' என அவதூறாக பேசி, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷை குத்த வந்துள்ளார். தினேஷ் தடுத்ததால் கையில் கத்தி குத்து விழுந்து காயம் ஏற்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தினேஷ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் காமராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி