மேலும் செய்திகள்
வாலிபர் கொன்று புதைப்பு நண்பர்கள் 4 பேர் கைது
05-Aug-2025
மூணாறு : தமிழக சுற்றுலாப் பயணி தங்கி இருந்த அறையில் இருந்து லேப்டாப், விலை உயர்ந்த அலைபேசி, ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவைகளை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு திண்டுக்கல் ஜாபர்சாதிக். இவர் தனது நண்பர்களுடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட், மூலக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர். ஜாபர்சாதிக் அறையை பூட்டிவிட்டு நண்பர்களுடன் ஆத்துக்காடு நீர்வீழ்ச்சியை காணச் சென்றார். அப்போது அறையில் வைத்திருந்த லேப்டாப், விலை உயர்ந்த அலைபேசி (ஐபோன்), ஏ.டி.எம்., உள்ளிட்ட கார்டுகள் ஆகியவை மாயமானதுடன் திருடிச் சென்ற ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.1.81 லட்சம் எடுக்கப்பட்டது. மூணாறு போலீசில் ஜாபர்சாதிக் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பினோத் குமார் தலைமையில் போலீசார் விசாரித்தனர். அதில் ஜாபர்சாதிக் தங்கிய அறையின் அருகே தங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் விஜயநகரை சேர்ந்த அஜய்ரவீந்திரன் 25, பொருட்களை திருடியதாக தெரிய வந்தது. அவரின் அலைபேசி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் அஜய்ரவீந்திரனை கைது செய்தனர்.
05-Aug-2025