உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பலி

மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தவர் பலி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி மகன் ஆறுமுகம் 25, ஜம்புலிப்புத்தூர் அருகே முறுக்கு கம்பெனியில் வேலை செய்தார். பாப்பம்மாள்புரத்தில் உள்ள சித்தி மகேஸ்வரி என்பவரின் வாடகை வீட்டில் ஆறுமுகம் அவ்வப்போது தங்கி செல்வார். நேற்று முன்தினம் இரவு சித்தி வீட்டிற்கு சென்ற ஆறுமுகம் சித்தி மகன் சதீஷ்குமாருடன் வீட்டின் மாடியில் தூங்கினார். நள்ளிரவில் சதீஷ்குமார் எழுந்து பார்த்தபோது ஆறுமுகத்தை காணவில்லை. அங்கு தேடிப் பார்த்தபோது ஆறுமுகம் வீட்டின் கீழே விழுந்து காயம் பட்டு கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தவர் குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை