ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்க சென்றவர் மின்சாரம் தாக்கி பலி
கம்பம் : கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் தெய்வம் 56 , இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மணி கட்டி ஆலமரம் பகுதி மலையடிவாரத்தில் தனது ஆடுகளுக்காக தீவணம் சேகரிக்க சென்றுள்ளார். ஆடுகளுக்காக தான் வைத்திருந்த தொரட்டியை பயன்படுத்தி இலை தழைகளை பறித்துள்ளார். அப்போது தொரட்டி எதிர்பாராத விதமாக மேலே இருந்த மின் ஒயரில் உரசி மின்சாரம் உடலில் பாய்ந்துள்ளது. அதே இடத்தில் பலியானார். இரவு வரை திரும்பாததால், குடும்பத்தார்கள் அவரை தேடி சென்றுள்ளனர். கயிறு மில் அருகில் உள்ள தோட்டத்தின் பக்கத்தில் வரப்பு ஒன்றில் இறந்து கிடந்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.