உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீசாரை தாக்கியவர் கைது

போலீசாரை தாக்கியவர் கைது

ஆண்டிபட்டி : க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் கனிராஜ், நேற்று முன் தினம் பணியில் இருந்த போது அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மணிமாறன் 38, முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு டூவீலரில் இருந்தபடி ஏட்டு கனிராஜை அசிங்கமாக பேசி உள்ளார்.ஸ்டேஷனில் இருந்து வெளியில் வந்த அவரை கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கனிராஜ் புகாரில் க.விலக்கு எஸ்.ஐ.,முஜிபுர் ரகுமான் வழக்கு பதிவு செய்து மணிமாறனை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !