உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் கணித துறை கருத்தரங்கு

கல்லுாரியில் கணித துறை கருத்தரங்கு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் கணித துறை சார்பாக இத்துறைக்கு கணிதவியலாளர்கள் ஆற்றிய பங்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வியாளர் அப்துல் ரஹீம், ராமனுஜர், ஆரியபட்டர், பிரம்மகுப்தா உள்ளிட்ட பல இந்திய கணிதவியலாளர்கள் கண்டுபிடிப்புக்களையும், தீர்வு கிடைக்காத பல கணித தேற்றங்களையும், அதற்கான மாற்று வழிமுறைகளையும், இன்றைய நவீன கணிணி தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வு காண முடியும் என்று விளக்கினார். கணித துறை பேராசிரியர் ரேஷ்மா வரவேற்றார். துறை தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். துறை பேராசிரியர் அனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி