கம்யூ., மாநில செயலாளர் நிர்வாகிகளுடன் சந்திப்பு
தேனி: தேனி நகராட்சிக்கு உட்பட்ட பொட்டல்களம் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலாளர் சண்முகம் பார்வையிட்டார். கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை பொது மக்களுக்கு இலவசமாக வழங்க கோரி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பால பாரதி தலைமையில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றி ஆலோசித்தார். தொடர்ந்து அப்பகுதியில் பொது மக்களுடன் இலவசமாக வீடு வழங்குவது தொடர்பான கோரிக்கை பற்றி பேசினார். தொடர்ந்து மாவட்ட, நகர நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.