ரூ.70 கோடியில் மெகா உணவுப்பூங்கா திறப்பு
தேனி: வீரபாண்டியில் இருந்து தப்புக்குண்டு செல்லும் ரோட்டில் ரூ.70 கோடி மதிப்பில் 123.49 ஏக்கரில் உணவுப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் குத்துவிளக்கேற்றி சிப்காட்டை பார்வையிட்டார். தங்கதமிழ்செல்வன் எம்.பி., தெற்கு மண்டல சிப்காட் செயற்பொறியாளர் கவிதா, திட்ட அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த உணவுப்பூங்காவில் 15ஆயிரம் மெட்ரிக்டன் கிடங்கு, ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளவு உடைய குளிர்சாதன கிடங்கு, ரூ.42.39 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளன.