உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாகச அகடாமிக்கு புதிய கட்டடம் பணியை அமைச்சர் துவக்கி வைப்பு

சாகச அகடாமிக்கு புதிய கட்டடம் பணியை அமைச்சர் துவக்கி வைப்பு

மூணாறு: தேவிகுளத்தில் சாகச அகடாமிக்கு புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணிகளை இளைஞர் நலத்துறை அமைச்சர் சஜிசெரியான் துவக்கி வைத்தார்.மூணாறு அருகே தேவிகுளத்தில் இளைஞர் நல வாரியம் சார்பில் சாகச அகடாமி செயல்படுகிறது. அதற்கான கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பயிற்சி அளிக்க இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் அங்கு புதிய கட்டடம் கட்ட ரூ.9.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்நிதியை கொண்டு 100 பேர் தங்கும் வகையில் தங்கும் விடுதி, பயிற்சி வகுப்புகள், ஆம்பி தியேட்டர், கூட்டம் மற்றும் உணவு அரங்கம், வி.ஐ.பி.கள் தங்க வசதி, நவீன கழிப்பறைகள், உபகரணங்கள் பாதுகாப்பு அறை ஆகியவை கட்டப்படுகிறது.கட்டுமான பணிகளை கேரள இளைஞர் நலத்துறை அமைச்சர் சஜி செரியான் துவக்கி வைத்தார். அதற்கான விழாவுக்கு தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா தலைமை வகித்தார். இளைஞர் நலவாரிய துணைத் தலைவர் சதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.விழாவில் அமைச்சர் கூறியதாவது: இந்த கட்டடம் சாகச சுற்றுலா மற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கட்டப்படுகிறது. சாகச சுற்றுலாவை விரும்பும் இளைஞர்களுக்கு அறிவியல் ரீதியாகவும் பயிற்சி அளிக்க வேண்டும். அதனை சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு சாகச அகடாமி செயல்பட வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ