மேலும் செய்திகள்
'கொள்கை வேறு கூட்டணி வேறு'
26-Apr-2025
தேனி: 'அரசு திட்டங்களில் பயன்பெற்றவர்களை ஓட்டுக்களாக மாற்ற வேண்டும் தி.மு.க.,தேனி வடக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.தேனியில் தி.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியசாமி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., சரவணக்குமார் வரவேற்றார்.அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: 2026 தேர்தல் களம் முக்கியத்துவம் வாய்ந்தது. முதல்வர் ஸ்டாலினுக்கு தேசிய அளவில் சிறந்த முதல்வர் என்ற பெயர் உள்ளது.தமிழகத்தில் அனைத்து குடும்பங்களும் ஏதாவது ஒரு அரசு திட்டத்தில் பயனடைந்துள்ளனர். இதனை ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலில் குறிப்பிட தக்க வெற்றி பெற்றோம். தேனியில் கடும் போட்டி என்ற பிம்பத்தை ஏற்படுத்தினர். ஆனால், மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். தலைமை தீர்மானிக்கும் வேட்பாளர், கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வது நம் கடமை ஆகும். நிர்வாகிகளிடம் ஒற்றுமை உணர்வு வேண்டும். நமக்குள் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், முதல்வர் நிற்பதாக கருதி பணிபுரிய வேண்டும்.நிர்வாகிகளுக்கான பதவி, பொறுப்புகள் கிடைக்க காலதாமதம் ஏற்படலாம், ஆனால், உரிய நேரத்தில் கிடைக்கும். பூத் ஏஜென்டுகள், கிளை நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூக்கையா, முத்துராமலிங்கம், நகராட்சி தலைவர்கள் ரேணுப்பிரியா, சுமிதா உள்பட பலர் பங்கேற்றனர்.
26-Apr-2025