உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அமைச்சர் வருகை ரத்து:அதிகாரிகள் ரிலாக்ஸ்

அமைச்சர் வருகை ரத்து:அதிகாரிகள் ரிலாக்ஸ்

கம்பம்,: வேளாண் அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று (டிச. 28) தேனிக்கு ஆய்வு நடத்த வருவதாக இருந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள்'ரிலாக்ஸ்'ஆகினர்.வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம்தேனி மாவட்டத்திற்கு இன்று ( டிச. 28 ) வளர்ச்சி பணிகள் மற்றும்ஆய்வுக்காகவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால் வேளாண், தோட்டக்கலைத் துறையினர் எட்டு வட்டாரங்களிலும் அமைச்சர் பார்வையிட பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கடந்த ஒரு வாரமாக இரு துறை அதிகாரிகள் இதே வேலையாகவும், டென்ஷனில் இருந்தனர். நேற்று திடீரென அமைச்சர் வருகை ரத்து செய்யப்பட்டதாக சென்னையில் இருந்து தகவல் வந்தது. அமைச்சர் வருகை ரத்து என்ற தகவல், வேளாண், தோட்டக் கலைத் துறையினரை ரிலாக்ஸ் அடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !