உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவனை இழந்த பெண் குழந்தைகளுடன் மாயம்

கணவனை இழந்த பெண் குழந்தைகளுடன் மாயம்

ஆண்டிபட்டி: கொண்டமநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் மகள் அபிநயா 23, இவருக்கும் வீர சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் திருமணம் முடிந்து சரவணபாண்டி 6, ரெஸ்விந்திகா 3, என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன் அபிநயாவின் கணவர் காமராஜ் இறந்து விட்டார். அபிநயா தனது குழந்தைகளுடன் தந்தையின் வீடு அருகே மற்றொரு வீட்டில் வசித்து வந்தார். டிசம்பர் 1ல் அபிநயா இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று வருவதாக தந்தை குமாரிடம் தெரிவித்து சென்றுள்ளார்.மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை குமார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை