உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ., பணம் மாயம்

தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ., பணம் மாயம்

ஆண்டிபட்டி: அமைச்சர் முன்னிலையில் ஆண்டிபட்டியில் தனியார் ஓட்டலில் நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ., மகாராஜனின் ரூ.50 ஆயிரம் பணம் மாயமானது. ஆண்டிபட்டியில் தி.மு.க., தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு வந்திருந்த எம்.எல்.ஏ., மகாராஜன் செலவுக்காக கொண்டு வந்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை கவரில் வைத்து தனது பனியனில் வைத்திருந்தார். அமைச்சர் வருகை மற்றும் கூட்டம் நடந்த போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கூட்டமாக உடன் இருந்துள்ளனர். கூட்டம் முடிந்த பின் சட்டையின் உள் பகுதியில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டும் பணத்தை எடுத்த நபர் குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ