ம.நீ.ம., கட்சியினர் கொண்டாட்டம்
தேனி: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்றதை முன்னிட்டு மாவட்டத்தில் 13க்கும் மேற்பட்ட பகுதிகளில் ம.நீ.ம., கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பெரியகுளத்தில் மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள்ஆதிலிங்க பாண்டியன், சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.