உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி 45, இவரது மகள் மேனிகா 28, கணவரை பிரிந்த இவருக்கு தனது தம்பியை திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு நிரஞ்சனா தேவி 8, என்ற குழந்தையும் உள்ளது. முத்துலட்சுமியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மேனகா மூன்று நாட்களுக்கு முன் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்வதாக குழந்தையுடன் சென்றவர் திரும்ப வரவில்லை. அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாததால் முத்துலட்சுமி ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !