உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகள் மாயம் தாயார் புகார்

மகள் மாயம் தாயார் புகார்

போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி 53. இவரது மகள் நாகஜோதி 38. இவருக்கும் உசிலம்பட்டி விருவீட்டை சேர்ந்த உதயகுமாருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டதில் நாகஜோதி கோபித்துக் கொண்டு போடியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். நாகஜோதி இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. தாயார் மணி புகாரில் போடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ