உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரோட்டோரம் தேங்கிய மண் வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டோரம் தேங்கிய மண் வாகன ஓட்டிகள் அவதி

தேனி: தேனி நகர்பகுதியில் ரோட்டோரம் தேங்கிய மண்ணால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் முன் அவற்றை அகற்ற வேண்டும்.தேனி மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த ரோட்டில் பங்களா மேட்டிற்கு கிழக்கு பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் ரோட்டோரத்தில் ஆங்காங்கே மணல் தேங்கி உள்ளது. ஆனால் பங்களா மேட்டில் இருந்து நேருசிலை வரை இருபுறமும், ரோட்டின் சென்டர் மீடியன் பகுதிகளில் அதிக அளவு மண் மேவி காணப்படுகிறது. இதில் டூவீலர்களில் செல்வோர் வாரி கீழே விழும் நிலை தொடர்கிறது. காற்றும் அதிகம் வீசும்போது இந்த மண்ணால் பஸ்சிற்காக காத்திருப்போர், பஸ்சில் செல்பவர்கள், டூவீலரில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

யார் அகற்றுவது...

குறிப்பிட்ட பகுதி நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளதால் நகராட்சி அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நினைக்கின்றனர். ஆனால், நெடுஞ்சாலையில் தானே மண் சேகாரமாகிறது என நகராட்சி அதிகாரிகள் நினைக்கின்றனர். இதனால் இருவரும் மண்ணை அகற்றுவதில்லை. இரு துறைகளிடையே காணப்படம் பிரச்னையில் பொதுமக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை