மேலும் செய்திகள்
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
21-Apr-2025
தேனி: தேனியில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற ஏப்.,30 வரை அவகாசம் வழங்கி உள்ளதாக நகரமைப்பு ஆய்வாளர் சலீம் தெரிவித்தனர்.சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஜன.,27 ல் பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டது.நேற்றுடன் 12 வாரங்கள் நிறைவடைந்தன. ஆனால், நகர்பகுதியில் பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. தி.மு.க., கொடிக்கம்பங்கள் இருந்த இடங்களில் கொடிக்கம்பங்கள் மட்டும் அகற்றப்பட்டு, கம்பம் இருந்து பெரிய பீடங்கள் அப்படியே உள்ளன.இதுபற்றி நகரமைப்பு ஆய்வாளர் சலீம்யிடம் கேட்ட போது, 'கட்சியினர் இருவாரத்திற்குள் அகற்ற நோட்டீஸ் வழங்க கூறி உள்ளனர். நகர்பகுதியில் உள்ள கட்சியினர், சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் அனைவருக்கும் ஏப்.,16ல் நோட்டீஸ் வழங்கினோம். அவர்கள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் ஏப்.,30க்கு பின் நகராட்சி சார்பில் அகற்றப்படும்,' என்றனர்.
21-Apr-2025