உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் தரம் உயரும் நகராட்சி, பேரூராட்சிகள்

மாவட்டத்தில் தரம் உயரும் நகராட்சி, பேரூராட்சிகள்

தேனி: மாவட்டத்தில் உள்ள சில நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மாவட்டத்தில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட மக்கட்தொகை, அடிப்படை வசதிகள், வார்டுகள் எண்ணிக்கை, அருகில் உள்ள நகர், கிராம பகுதிகளை பற்றி கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்ட தலைநகரான தேனி-அல்லிநகரம், பெரியகுளம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் புதிய நகராட்சிகள் உருவாகுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். சில பேரூராட்சிகளை நகராட்சிகளுடன் இணைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். அடுத்த மாதம் நகராட்சி, மாநகராட்சி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SRINIVASAN PALANI
ஏப் 04, 2025 10:31

தருமபுரி நகராட்சியை மாநகராட்சி தரம் உயர்த்த வேண்டும். மேலும் இந்த நகரம் மாவட்டம் ஆகி 50 ஆண்டு ஆகி விட்டது. இந்த மாவட்டத்தில் நகராட்சி ஆக தரம் உயர்த்த வேண்டிய நகரம்.அறுர் பாலக்காடு பென்னாகரம்.


புதிய வீடியோ