உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த மேல்நிலை தொட்டி அகற்றுவதில் நகராட்சி அலட்சியம்

சேதமடைந்த மேல்நிலை தொட்டி அகற்றுவதில் நகராட்சி அலட்சியம்

தேனி: தேனியில் இடியும் நிலையில்உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இடிக்க நகராட்சியில் நிதி ஒதுக்கி, தீர்மானம் நிறைவேற்றி 4 மாதங்கள் ஆகியும் அதற்கான பணியை நகராட்சி துவங்கவில்லை.தேனி நகராட்சிக்கு 20வது வார்டில் கே.ஆர்.ஆர்.,நகர் 6வது தெருவில் 1982ல் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டி சேதம் காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அந்த நீர்தேக்க தொட்டி பயன்பாடின்றி உள்ளது. அந்த தொட்டியை சுற்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் தொட்டியின் துாண்கள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. நகராட்சியில் 2025 ஏப்., 9ல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், ரூ.2.50 லட்சம் செலவில் இந்த தொட்டியை இடித்து அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றி 3 மாதங்கள் ஆகியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. தொட்டி இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !