வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவனை யெல்லாம் திட்டம் போட்டு பிடிக்கும் போலீஸ் சின்ன அணிலை பிடிக்க முடியாது போனது ஏன்.
மூணாறு : இடுக்கி மாவட்டம் குமுளி அருகே செங்கரையில் நடந்த கொலை வழக்கில் தலைமறைவான மகாதேவனை 48, இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.செங்கரையைச் சேர்ந்த கணேசன் 18. சொத்து பிரச்னை தொடர்பாக உறவினர்களால் 1997 ஜூன் 7ல் கொலை செய்யப்பட்டார். வழக்கில் இறந்த கணேசனின் மூத்த சகோதரர் லிங்கம், உறவினர்கள் தனராஜ், பாலசந்தர் ஆகிய மூவரை, குமுளி போலீசார் கைது செய்தனர். வழக்கில் 4வது குற்றவாளியான மகாதேவன் 48, தலைமறைவானார். அவரை குமுளி போலீசார் தேடினர். இந்நிலையில் அவர் தேனி மாவட்டம் வருஷநாடு அருகே தர்மராஜபுரத்தில் தலைமறைவாக இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்யும் வகையில் குமுளி போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் மாரியப்பன், 'வங்கி அதிகாரி' போன்று வருஷநாட்டில் வெகு நாட்களாக தங்கி மகாதேவனின் நடமாட்டத்தை கண்காணித்தார். அதில், 'மகாதேவன் தர்மராஜபுரத்தில் மனைவி, 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.' என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து குமுளி எஸ்.ஐ.,க்கள் ஜெபிஜார்ஜ், அனந்து ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்து 28 ஆண்டுகளுக்கு பின், தமிழக போலீசாரின் உதவியுடன், மகாதேவனை கைது செய்தனர்.
இவனை யெல்லாம் திட்டம் போட்டு பிடிக்கும் போலீஸ் சின்ன அணிலை பிடிக்க முடியாது போனது ஏன்.