உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருத்துவமனையில் கர்ப்பிணி கழுத்தை நெறித்த மர்ம நபர்

மருத்துவமனையில் கர்ப்பிணி கழுத்தை நெறித்த மர்ம நபர்

மூணாறு: மூணாறில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியை நள்ளிரவில் கழுத்தை நெறித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மூணாறில் செட்டில்மென்ட் காலனியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் டாடா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வார்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் கழுத்தை நெறித்துள்ளார். பெண் கூச்சலிட்டதால் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். மூணாறு போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்கள் மூலம் ஆய்வு செய்து, மர்ம நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை