உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாயமான பெண் வைகை பிக்கப் அணையில் சடலமாக மீட்பு

மாயமான பெண் வைகை பிக்கப் அணையில் சடலமாக மீட்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி ஜெ.ஜெ., நகரைச்சேர்ந்தவர் நெசவாளர் பொன்ராசு மனைவி ஆவுடையாச்சி 60, கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறில் அக்டோபர் 22 ல் வீட்டை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தனர். உறவினர்கள், போலீசார் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று முன் தினம் வைகை பிக்கப் அணையில் பெண் இறந்து சடலமாக மிதப்பது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வைகை அணை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சடலமாக மிதந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரித்ததில் அக்டோபர் 22-ல் காணாமல் போன ஆவுடையாச்சி என்பது அவரது உறவினர்களால் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ