மேலும் செய்திகள்
'ஆஷாடா வெள்ளி'க்கு தயாராகும் சாமுண்டீஸ்வரி மலை
24-Jun-2025
தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு என தனி கோயில் தேனி மாவட்டம் குச்சனுாரில் மட்டுமே உள்ளது. சுயம்புவாக சனீஸ்வரர் இங்கு சுரபி நதிக்கரையில் எழுந்தருளி உள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளிலும், ஆண்டு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும் பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாத பெருந்திருவிழா ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விமரிசையாக நடைபெறும். மூன்றாவது சனிக்கிழமை ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். கோயில் வளாகம், சுரபி நதிக்கரைகளில் வசதிகள் இல்லாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பெண்களுக்கு கழிப்பறை வசதி போதிய எண்ணிக்கையில் கிடையாது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நகரில் வரும் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட், கழிப்பறைகள், குளியலறைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும். கோயிலிற்கு செல்லும் முன் சுரபி நதியில் குளித்து விட்டு பக்தர்கள் செல்கின்றனர். அந்த இடத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித் தனியாக உடை மாற்றும் அறைகள் கட்டுவதுடன், இருபாலரும் தனித்தனியாக குளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி சுவாமி தரிசனம் செய்து செல்ல வழிகாட்டிகள் நியமிக்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை, குச்சனுார் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பு வளர்ச்சி திட்டம் ஒன்றை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
24-Jun-2025