உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வாக்காளர் பட்டியலில் புதிய போட்டோ மிஸ்சிங்

 வாக்காளர் பட்டியலில் புதிய போட்டோ மிஸ்சிங்

பெரியகுளம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது பெயர் சேர்க்கைக்காக ஆதாரங்களுடன் வாக்காளர்களிடம் பெறப்பட்ட புதிய பாஸ்போர்ட் போட்டோ பட்டியலில் சேர்க்காமல் பழைய படங்கள் உள்ளது. மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப்பணி நவ.4 முதல் டிச.14 வரை நடந்தது. இதில் பி.எல்.ஓ.,க்கள் வீடு வீடாக சென்று படிவம் வழங்கி, ஆதாரங்களுடன் பூர்த்தி செய்த படிவங்களை பெற்றனர். பட்டியலில் 10 ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட வாக்காளர்கள் போட்டோ இருந்தது. எனவே வாக்காளர்கள் ஒவ்வொரு வரிடமும் புதிய படம் பெறப்பட்டது. இதனால் வாக்காளர்கள் பணம் செலவு செய்து பாஸ்போர்ட் போட்டோ எடுத்து படிவங்களில் ஒட்டி வழங்கினர். இப் படிவங்கள் புதிய டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்தனர். பரிசீலனை செய்த படிவங்களை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் டிச. 19 ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மொத்தம் 10,04,564 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நேற்று துவங்கியது. இதில் வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் இருப்பதை பார்ப்பதற்கு பி.எல்.ஓ.,க்கள் உதவியுடன் வாக்காளர் பட்டியலை சரிபார்த்தனர். அதில் பெரும்பாலும் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் தாங்கள் கொடுத்த புதிய பாஸ்போர்ட் படம் பட்டியலில் பதிவேற்றம் செய்யப்படாமல், பழைய படங்கள் இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து வாக்காளர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், பி.எல்.ஓ.,க்களிடம் கேட்டபோது, அடுத்து வரும் பட்டியலில் புதிய படம் இடம்பெறும் என சமாளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை