உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அ.தி.மு.க., கவுன்சிலர்களும் ஆப்சென்ட்

ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அ.தி.மு.க., கவுன்சிலர்களும் ஆப்சென்ட்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி தி.மு.க., தலைவர் சந்திரலேகா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் கவுன்சிலர்கள் தவிர்த்து விட்டனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க., 8, அ.தி.மு.க., 6, இந்திய கம்யூ.,1, மார்க்சிஸ்ட் கம்யூ.,1, வி.சி.க.,1 கவுன்சிலர்கள் உள்ளனர். 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராமசாமி இறந்ததால் அந்த பதவியிடம் காலியாக உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த சந்திரகலா பேரூராட்சி தலைவராக உள்ளார். தலைவர் மீதான அதிருப்தியால் கவுன்சிலர்கள் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு நடத்தி பதிவு செய்ய உயர் நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 10:30 மணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமையில் கவுன்சிலர்கள் ரகசியமாக ஓட்டளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 6 பேர் தி.மு.க.,தலைவருக்கு எதிராக ஓட்டளிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தி.மு.க., தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தாகவும், இன்னும் ஓர் ஆண்டுக்கு அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால்தி.மு.க.,வைச் சேர்ந்த சந்திரகலா ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவராக தொடர்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை