உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / என்.எஸ்.,இன்ஜி.,கல்லுாரி மாணவர் மாநில சைக்கிள் போட்டியில் முதலிடம்

என்.எஸ்.,இன்ஜி.,கல்லுாரி மாணவர் மாநில சைக்கிள் போட்டியில் முதலிடம்

தேனி : சென்னையில் மாநில அளவில் சைக்கிள் போட்டி நடந்தது. இப்போட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இதில் நிர்ணயிக்கப்பட்ட 48 கிலோ மீட்டர் துாரத்தை தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர் பிரமோத் 19 நிமிடங்கள் 16 நொடியில் கடந்து முதலிடம் வென்றார். பரிசுத்தொகையாக ரூ. 3 லட்சம் பெற்றார்.வெற்றி பெற்ற மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், கல்லுாரி முதல்வர் மதளைசுந்தம், துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை