மேலும் செய்திகள்
தன்னலமற்ற சேவையை வளர்க்கும் என்.எஸ்.எஸ்.,
18-Dec-2024
தேனி: தேனி வெங்கடாசலபுரம் ஸ்ரீவரத வேங்கடரமண மேல்நிலைப்பள்ளி சார்பில் சவளப்பட்டியில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. பள்ளி வித்யாசபையின் சபைத்தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். முகாமில் போதை ஒழிப்பு, நெகிழி தவிர்ப்பு, கோயில் துாய்மைப்பணிகள், விழிப்புணர்வுகள், ஊர்வலங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கு மலையேற்றம் பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன் ஆலோசனையில் பள்ளி திட்ட அலுவலர் சரவணன் முகாமை ஒருங்கிணைத்தார்.
18-Dec-2024