உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  என்.எஸ்.எஸ்., முகாம்

 என்.எஸ்.எஸ்., முகாம்

உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், உ. அம்மா பட்டியில் திட்ட முகாம் நடந்தது. கல்லுாரி முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார். மதுரை காமராஜ் பல்கலையின் என்.எஸ்.எஸ்., திட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி துவக்கி வைத்தார். கிராம மக்களுக்கு தேனி மாவட்ட பல் மருத்துவ சங்கத்தின் சார்பில், மருத்துவ முகாம் நடந்தது. இதில் டாக்டர்கள் பற்களை எவ்வாறு துலக்க வேண்டும், எவ்வாறு துலக்கக் கூடாது என்பதை விளக்கிக் கூறினர். தொடர்ந்து நடந்த கால்நடை முகாமிற்கு டாக்டர் ஹர்சினி தலைமையிலான குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் அனிதா, ரஷிதா பானு, ஜன்னத்துல் பிர்தவுஸ் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான மாணவிகள் பங்கேற்று கிராம மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை விளக்கி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை