உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

தேனி: அங்கன்வாடிகள் மூலம் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி கூறினார்.அவர் கூறியதாவது: செப்டம்பரில் தேசிய ஊட்டசத்து மாதம் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். தாய்பால் முக்கியத்துவம், குழந்தைகள் பராமரிப்பு, ஊட்டச்சத்து உணவுகள், வளர்ச்சிநிலை உள்ளிட்ட தலைப்புகளில் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஊராட்சிகள், ஒன்றிய அளவிலும் நடத்த உள்ளோம். மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களை துாய்மையாக பராமரித்தல், குழந்தைகள் பராமரிப்பில் சிறப்பாக செயல்பட்ட 30 அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !