நடைபாதை ஆக்கிரமிப்பு பொதுமக்கள் அவதி
மூணாறு: ஊராட்சி காம்ப்ளக்ஸ்சில் நடைபாதை முழுவதும் ஆக்கிரமித்து பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் நடைபாதை இன்றி பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். மூணாறு நகரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் ஊராட்சி காம்ப்ளக்ஸ் உள்ளது. அங்கு இருபுறமுமாக 38 கடைகள் உள்ளன. கடைகள் முன்பு நடைபாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வாரவிடுமுறை, பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க தொழிலாளர்கள்,பொதுமக்கள் அதிகம் செல்வதுண்டு. அவர்கள் நடை பாறை இன்றி அவதியுற்று பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு நடைபாதையை முறைப்படுத்திட கோரிக்கை எழுந்தது.