உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அலைபேசி எண்களை மாற்றினால் வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதிகாரிகள் அறிவுறுத்தல்

அலைபேசி எண்களை மாற்றினால் வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; அதிகாரிகள் அறிவுறுத்தல்

தேனி : ''வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றினால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பெரும்பாலானவர்கள் வங்கி பரிவர்த்தனைக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் வங்கி கணக்குடன் இணைத்துள்ள அலைபேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்யமல் உள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த அலைபேசி எண் வேறு சிலருக்கு நெட்வொர்க் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இதன் மூலம் முன் வங்கி கணக்குடன் இணைத்துள்ள அலைபேசி எண்ணை பயன்படுத்துபவர் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்பு அந்த எண்ணை பயன்படுத்தியவர் பணத்தை இழக்க நேரிடலாம். இதுபற்றி வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்கள் இயக்கத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான ஓ.டி.பி., பாஸ்வேர்டுகளை தேவையின்றி பகிரக்கூடாது. மேலும் பயன்படுத்திய அலைபேசி எண்ணை மாற்றினால் அல்லது அந்த அலைபேசி எண்ணை வேறு யாரும் பயன்படுத்துவது தெரிந்தால், வங்கிகளில் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து வங்கிகளில் கடிதம் வழங்கினால் புதிதாக பயன்படுத்தக்கூடிய அலைபேசி எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !