விரக்தியில் முதியவர் தற்கொலை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரப்படித்தேவன்பட்டி முதியவர் மாயத்தேவர் 80. மனைவி இறந்த பின், மகன் யோகமணி, அவரது தம்பி பராமரிப்பில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதித்ததால் மன விரக்தியில் இருந்தார். இரு நாட்களுக்கு முன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.