உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதிமுறை மீறிய ஆம்னி பஸ்கள் லாரிகளுக்கு ரூ.2.57 லட்சம் அபராதம்

விதிமுறை மீறிய ஆம்னி பஸ்கள் லாரிகளுக்கு ரூ.2.57 லட்சம் அபராதம்

தேனி: தேனி வட்டார போக்கு வரத்துத்துறை நடத்திய வாகன சோதனையில் சாலை வரி செலுத்தாத 2 ஆம்னி பஸ்களுக்கு ரூ.68 ஆயிரம், அதிக பாரம் ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு ரூ.1.89 லட்சம் என, ரூ.2.57 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணியளவில் தேனி அன்னஞ்சி பைபாஸ் ரோட்டில் தேனி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரராமன் தலைமையிலான அதிகாரிகள் ஆம்னி பஸ்கள், வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில் சாலை வரி செலுத்தாத 2 ஆம்னி பஸ்கள், பெங்களூரூவில் இருந்து கட்டப்பனை சென்றது தெரிந்தது. அதன் உரிமையாளர்கள், டிரைவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரம் அபராதமாக பெறப்பட்டது. அதிக எடை ஏற்றிச் சென்ற 5 லாரிகள், டிரிப் ஷீட், ஆவணங்கள் முறையாக இல்லாத வாகனங்களின் டிரைவர்களிடம் ரூ.1.89 லட்சம் அபராதம் வசூலித்து அனுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி