பீர் பாட்டிலால் தாக்கி ஒருவர் காயம் : இருவர் கைது
தேனி: போடி பெருமாள்கவுண்டன்பட்டி பேச்சியம்மன் கோயில் தெரு தொழிலாளி ஈஸ்வரன் 43. இவர் ஏப்.14ல் டொம்புச்சேரி டாஸ்மாக்கில் பீர் பாடடில் வாங்கி சென்றார். அப்போது உப்புக்கோட்டை வடக்குத்தெரு ராஜதுரை 30, அதேப் பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 25, ஆகியோர் ஈஸ்வரனை திட்டி ,மது பாட்டில் வாங்கி வா என்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ராஜதுரை, பாண்டீஸ்வரன் சேர்ந்து ஈஸ்வரனை காலி பீர்பாட்டிலால் தலையின் பின்புறம் தாக்கினர்.இதில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஈஸ்வரனை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் ராஜதுரை, பாண்டீஸ்வரன் மீது கொலை மிரட்டல் வழக்கில் இருவரையும் கைது செய்தனர்.