உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி

பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் 30. தேவதானப்பட்டியில் தனது நண்பரை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே திரும்பும் போது, டூவீலர் மீது கார் மோதியது. பலத்த காயமடைந்த அசோக் குமார் பெரிய குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் அசோக்குமார் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய 'கே.எல்.24 யூ 7979' என்ற கார் டிரைவரை தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ