மேலும் செய்திகள்
ஆண்டிபட்டியில் ரோட்டோர கடைகளால் விபத்து அபாயம்
16-Jul-2025
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் அருகே ரோட்டின் ஓரத்தில் டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பெத்தன் 65, கடமலைக்குண்டு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து இறந்து போன தன் மனைவியின் பண பலனை பெறுவதற்காக ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் சென்றார். டீக்கடை முன்பு மற்றவர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஆண்டிபட்டியில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் டீக்கடை முன்பு நின்றிருந்தவர்கள் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த பெத்தன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்தில் கடமலைக்குண்டை சேர்ந்த பட்டயன் 45, எம். சுப்புலாபுரம் வீருசின்னம்மாள்புரம் போதுமணி 44, உத்தப்பநாயக்கனூர் அருகே புதுக்கோட்டையை சேர்ந்த செல்லப்பாண்டி 18, வைரச்செல்வி 37, ஆகியோர் காயமடைந்தனர். விபத்து குறித்து முருகேஸ்வரி புகாரில் கார் டிரைவர் உசிலம்பட்டி வகுரணியைச்சேர்ந்த ஆனந்தராஜ் 32, என்பவரிடம் ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Jul-2025