உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிலப் பிரச்னை ஒருவருக்கு கத்தி குத்து, இருவர் கைது

நிலப் பிரச்னை ஒருவருக்கு கத்தி குத்து, இருவர் கைது

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே சிறப்பறையைச் சேர்ந்தவர் மலைச்செல்வம் 65, இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ராஜா 44, என்பவரின் குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்னை இருந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன் மலைச்செல்வத்தின் மகன் ராஜீவ்ராம், தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மூலக்கடை சென்று விட்டு திரும்பி வரும்போது ராஜாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டுள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் மலைச்செல்வம் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜா, செல்வபாண்டி 39, ரஞ்சனி ஆகியோர் மீண்டும் தகராறு செய்துள்ளனர். அப்போது ராஜா மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜீவ்ராமின் வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜீவ் ராம் புகாரில் ராஜா, செல்லப்பாண்டி ஆகியோரை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !