மேலும் செய்திகள்
இன்று இனிதாக >> திருப்பூர்
09-Jun-2025
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவில் நகர்ப்புற நல வாய்வு மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்தார். பெரியகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ்ஜித்சிங், எம்.பி.,தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., சரவணக்குமார் நகராட்சி தலைவர் சுமிதா, சப் -கலெக்டர் ரஜத்பீடன், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசித்ரா, மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், நிலைய அலுவலர் சுகன்யா உட்பட பலர் பங்கேற்றனர்.இம் மருத்துவமனையில் கர்ப்பகால மற்றும் பிரசவ கால சேவைகள், சிசு, குழந்தைகள் நலம், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 வரையும், மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை செயல்படும்.
09-Jun-2025