உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் நிலங்களை பசுமையாக்க உத்தரவு

கோயில் நிலங்களை பசுமையாக்க உத்தரவு

தேனி: மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில் நிலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.தமிழகத்தில் இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு உட்பட்ட காலி நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, அத்துறையின் கமிஷனர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக தேனி மாவட்டத்தில் கோயில் நிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கி உள்ளன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'துறையின் கட்டுப்பாட்டில் 862 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு பாத்தியப்பட்ட குத்தகைக்கு விட முடியாத நிலையில் உள்ள நிலங்களின் விபரங்களை செயல் அலுவலர்களிடம் கேட்டுள்ளோம். இவற்றை மொத்தமாக கணக்கெடுத்து பின் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை துவக்க உள்ளோம்.', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை